Posts

Showing posts from October, 2022

சிறுகதை தோற்றமும் வளர்ச்சியும்

                                                                                                                  -  செப்டம்பர் 03, 2017                                                                                                 முனைவர் கிகோவிந்தன்        முன்னுரை   காலம் காலமாகக் கதை சொல்வதும், கதை கேட்பதும் எல்லாத் தேசங்களிலும், எல்லா மக்களிடையேயும் வாய்மொழி மரபாக இருந்து வந்திருக்கிறது. நாகரிகம் தோன்றுவதற்கு முன்பே, மக்கள் இனக் குழுக்க...

உரைநடையின் தோற்றமும் வளர்ச்சியும்

முன்னுரை கருத்துக்களை எளிதில் சொல்வதற்கேற்ற எழுத்து வடிவமே உரைநடையாகும். எந்த இலக்கண மரபுகளுமின்றி பேசுவதுபோல எழுதுவது இந்நடையின் தனிச்சிறப்பாகும். படிப்பவர்கள் எளிதில் புரிந்துகொள்ள உரைநடை பெரிதும் உதவுகிறது. தமிழ் உரைநடை தொன்மை வாய்ந்தது. தமிழ் மொழியில் எழுதப் பெற்ற முதல் இலக்கண நூலான தொல்காப்பியத்தில் உரைநடை தொடர்பான குறிப்பு இடம் பெற்று உள்ளது. உரை வகை நடையே நான்கு என மொழிபடும்(பொருள் : 475 : 5) என்பது தொல்காப்பியச் சூத்திரம். உரைநடை இலக்கியம் நான்கு வகைப்படும் என்பது இதன் பொருள். என்றாலும், அந்தக் காலத்தைச் சேர்ந்த உரைநடை நூல்கள் இன்று கிடைக்கப் பெறவில்லை. இளங்கோவின் உரைநடை சிலப்பதிகாரக் காலத்தில் மேலும் வளர்ந்து உள்ளது. சிலப்பதிகாரம் செய்யுள் வடிவில் அமைந்தது. அதில், செய்யுளுக்கு இடைப்பட்ட பகுதிகளில் உரைநடையில் சில குறிப்புகள் இடம் பெற்று உள்ளன. இதனால், சிலப்பதிகாரத்தை ‘உரை இடை இட்ட பாட்டுடைச் செய்யுள்’ என்று குறிப்பதும் உண்டு.. நக்கீரர் உரைநடை       தமிழ் மொழியில் முதன்முதலில் ஏட்டில் எழுதப் பெற்ற முதல் உரை இறையனார் அகப்பொருள் உரை ஆகும். இறையனார் அகப்பொருள் என்னும்...