Posts

Showing posts from July, 2021

நற்றிணை - அறிமுகம்

முனைவர் கி. கோவிந்தன் எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும் ‘திணை’ என்னும் பெயரும் சேர்ந்து ‘நற்றிணை’ என்னும் பெயரால் இந்நூல் வழங்கப்படுகிறது. நூல் அமைப்பு             நற்றிணையில் இடம்பெற்றுள்ள பாடல்களின் எண்ணிக்கை 400. பாடல்கள் 9 அடிகள்  முதல்  முதல் 12 அடிகள் வரை. இந்நானூறு பாடல்களையும் 175 புலவர்கள் பாடியுள்ளனர். பாண்டிய அரசன் மாறன்வழுதி என்பவனால் இந்நூல் தொகுப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், தொகுத்த ஆசிரியர் பெயர் தெரியவில்லை. நற்றிணை ஆசிரியர்கள் சிலரின் இயற்பெயர் தெரியவில்லை. அதனால் அவர்கள் பாடல்களில் இடம்பெற்றுள்ள அடிகளால் பெயர் பெற்றுள்ளனர். (எ.கா. தேய்புரி பழங்கயிற்றனார், தனிமகனார்). சிறப்புகள்        நற்றிணைப் பாடல்கள் அக்காலச் சமூகத்தை அறிய பெரிதும் துணைபுரிகின்றன. மன்னர்களின் ஆட்சிச் சிறப்பு, கொடைத்தன்மை, கல்வியாளர்களின் சிறப்பு, மக்களின் வாழ்க்கை முறைகள், நம்பிக்கைகள், சடங்குகள் போன்றவற்றை இவை உணர்த்துகின்றன. பல்லி கத்தும் ஓசையை வைத்து...

அகநானூறு அறிமுகமும் பாடிய புலவர்களும்

  முனைவர் கி.கோவிந்தன் உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை சங்க இலக்கியங்களில் அகப்பொருள் பற்றிய செய்திகளை விரிவாகத் தரும் நூல் அகநானூறு ஆகும்.அகம்+நானூறு என இதனைப் பிரித்துப் பார்க்கலாம். அகப்பொருள் தொடர்பான நானூறு பாடல்களைக் கொண்டது என்ற அடிப்படையில் இந்நூல் நானூறு பாடல்கலைக் கொண்டுள்ளது. கடவுள் வாழ்த்தாக ஒரு பாடல் உள்ளது. இதனைப் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார்.13 அடி சிறுமையும் 31 அடி பெருமையும் கொண்ட பாடல்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. நெடுந்தொகை எனவும் இந்நூலை அழைப்பர். இந்நூல் உப்பூரிகுடிகிழார் மகனார் உருத்திரசன்மர் என்னும் புலவர் பெருமானால் தொகுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொகுக்கச் செய்தவன் பாண்டியன் உக்கிரப்பெருவழுதி என்னும் பேரரசன் ஆவான். இந்நூல் முப்பிரிவாகப்பகுக்கப்பட்டுள்ளது. 1.களிற்றியானை நிரை (1-120 பாடல்கள்) 2.மணிமிடைப்பவளம் (121-300 பாடல்கள்) 3.நித்திலக்கோவை (301-400 பாடல்கள்) அகநானூற்றைத் தொகுத்த புலவர் சில ஒழுங்குமுறைகளைப் பின்பற்றி தொகுத்துள்ளார். 1,3,5,7,9,11 போன்ற ஒற்றைப்படையில் அமையும் பாடல்கள் பாலைத்திணையில் அமைந்த பாடல்களாகவும் (மொத்தம் 200பாடல்கள்),2,8,12,18 என 2...

இரட்டைக் காப்பியங்கள்

  இரட்டைக் காப்பியங்கள்                                                  முனைவர்.கி.கோவிந்தன்   முன்னுரை ஏதேனும் ஒரு வகையில் ஒற்றுமை உடைய அல்லது தொடர்புடைய   இரண்டை   “ இரட்டை ”   என்பது மரபு. சான்றாக   இரட்டைப் பிள்ளைகள் , இரட்டைப் புலவர்கள் (இளஞ்சூரியர்   &  முதுசூரியர்) , இரட்டை நகரங்கள் (ஹைதராபாத்   &   செகந்திராபாத்)   ஆகியவற்றைக் கூறலாம். இவ்வாறு   தமிழ் இலக்கியங்களுள்   “ இரட்டைக் காப்பியங்கள் ”   சிலப்பதிகாரம்   &   மணிமேகலை   ஆகிய இரு   காப்பியங்களைக்   கூறலாம். கோவலன் , கண்ணகி இருவரின் வாழ்வைப் பற்றியது சிலப்பதிகாரம் ஆகும்.   கோவலனுக்கும் , மாதவிக்கும் பிறந்த மகளான மணிமேகலைப்   பற்றியது மணிமேகலைக்   காப்பியம் ஆக...