சீறாப் புராணம் புலிவசனித்த படலம்

 

 

சீறாப் புராணம் புலிவசனித்த படலம்

 முனைவர்கி.கோவிந்தன்உதவிப்பேராசிரியர்,தமிழ்த்துறை

தமிழில்  எழுதப்பட்ட தலைசிறந்த இசுலாமிய இலக்கியம் சீறாப்புராணம். இந்நூல் இறைதூதர் நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு தமிழ்மரபுகளைப் பின்பற்றி எழுதப்பட்ட ஒரு காவியம். இதனை இயற்றியவர் 18-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த உமறுப் புலவர் ஆவார். அதே காலத்தில் வாழ்ந்த வள்ளல் சீதக்காதியின் ஆதரவை உமறுப் புலவர் பெற்றார். வள்ளல் சீதக்காதியின் பெருமையைச் "செத்தும் கொடுத்தான் சீதக்காதி" என்ற சொற்றொடர் விளக்கும். எட்டையபுர சமீன் ஆஸ்தானப் புலவராகத் திகழ்ந்த உமறுப்புலவர் இளம்வயதிலேயே தம் குருவின் எதிரியை வெற்றி கண்டவர். நபிகள் நாயகத்தின் வரலாற்றையும் அறிவுரையையும் சமயத் தொண்டையும் விளக்கி 5027 பாடல்கள் கொண்ட சீறாப் புராணத்தை இயற்றியதால் இசுலாமியக் கம்பர் என்று போற்றப்படுபவர். தலைப்பாகை, முறுக்கு மீசை, கையில் தங்கக்காப்புப் பூண்டு இந்து போல விளங்கிய இவரை எட்டப்ப பூபதியும் சீதக்காதியின் பொருளாளரான அபுல்காசிமும் ஆதரித்து உள்ளனர். இசுலாமியத் தமிழ் இலக்கியங்களில் முதன்மையானது சீறாப் புராணம். ~சீறத்| என்னும் அரபுச் சொல்லில் இருந்தே ~சீறா| என்ற சொல் தோன்றியது. சீறத் - என்ற சொல்லுக்கு வாழ்க்கை வரலாறு என்றும் 'புராணம்' என்ற சொல்லுக்குப் புனிதக் கதை என்றும் பொருள். அவ்வகையில் இஸ்லாமியத்தை உலகிற்குப் போதித்து நல்வாழ்வு வாழ்ந்த முகமதுநபி ஸல் அவர்களே இக்காப்பியத் தலைவர். விருத்தப்பாக்களிலான இப்புராணம். சீறாப்புராணத்தில் மொத்தம் 91 படலங்கள் உள்ளன. நூலின் மொத்தப் பாடல்களின் எண்ணிக்கை 5,228. 18 ஆம் நூற்றாண்டில் இந்நூலை ஏடு தேடிப் பதிப்பித்து வெளியிட்டவர் புலவர் நாயகம் செய்கு அப்துல் காதிறு நயினார் லெப்பை ஆலிம் புலவர் (கேனாப் புலவர்) ஆவார்                                சீறாப்புராண அமைப்பு

சீறாப் புராணம் இரண்டு பாகங்களில் அமைந்துள்ளது. முதற்பாகத்தில் 44 படலங்களும், இரண்டாவது பாகத்தில் 47 படலங்களும் உள்ளன. முதற்பாகமானது இரண்டு காண்டங்களாக அமைந்துள்ளது.  விலாதத்துக் காண்டம் (மொத்தம் 23 படலங்கள்)

முதற்பாகத்தில் முதலாவதாக உள்ள விலாதத்துக் காண்டம் என்பது நபிகள் நாயகம் அவர்களின் பிறப்பு முதல் திருமணம்;

வரையிலான வாழ்க்கை நிகழ்ச்சிகளை விவரிக்கும் பகுதியாகும். கடவுள் வாழ்த்துப் படலம், நாட்டுப் படலம், தலைமுறைப் படலம், நபியவதாரப் படலம், அலிமா முலையூட்டுப் படலம், இலாஞ்சனை தரித்த படலம், புனல் விளையாட்டுப் படலம், புகைறா கண்ட படலம், பாதை போந்த படலம், சுரத்திற் புனலழைத்த படலம், பாந்தள்வதைப் படலம், நதிகடந்த படலம,; புலிவசனித்த படலம், பாந்தள் வசனித்த படலம்;, இசுறாகாண் படலம,; கள்வரை நதிமறித்த படலம,; சாமு நகர் புக்க படலம,; கரம் பொருத்து படலம், ;ஊசாவைக் கண்ட படலம,; கதீசா கனவு கண்ட படலம,; மணம் பொருத்து படலம், மணம்புரி படலம,; கஃபத்துல்லா வரலாற்றுப் படலம் ஆகிய படலங்கள் இதில் உள்ளன. .நுபுவ்வத்துக் காண்டம் (மொத்தம் 21 படலங்கள்) இரண்டாவதாக உள்ள நுபுவ்வத்துக் காண்டம் நபிப்பட்டம் அருளப்பட்டதில் இருந்து மக்கமாநகரில் நபிகள் நாயகம் வாழ்ந்த காலம்வரை நடந்த வரலாற்றினைக் கூறுவதாகும். இது இஸ்லாமிய சமயம், வானவர் மூலம் நபிக்கு அருளப்பட்டதைக் கூறுகிறது. நபிப்பட்டம் பெற்ற படலம், தொழுகை வந்த வரலாற்றுப் படலம், தீனிலைக்கண்ட படலம், உமறுகத்தாபீமான் கொண்ட படலம், உடும்பு பேசிய படலம், உத்துபா வந்த படலம், அபீபு மக்கத்துக்கு வந்த படலம், மதியையழைப்பித்த படலம், தசைக் கட்டியைப் பெண்ணுருவமைத்த படலம், அபீபு ராஜா வரிசை வரவிடுத்த படலம், ஈமான் கொண்டவர்கள் அபாசா ராச்சியத்துக்குப் போந்த படலம், மானுக்குப் பிணை நின்ற படலம், ஈத்தங்குலை வரவழைத்த படலம், ஒப்பெழுதித் தீர்ந்த படலம், புத்து பேசிய படலம், பிராட்டியார் பொன்னுலகு புக்க படலம், பருப்பதராசனைக் கண்ணுற்ற படலம், அத்தாசீமான் கொண்ட படலம், ஜின்களீமான் கொண்ட படலம், காம்மாப் படலம், விருந்தூட்டுப் படலம் ஆகிய படலங்கள் இதில் உள்ளன.  இசிறத்துக்(ஹிஜிறத்துக்;)காண்டம் (மொத்தம் 47 படலங்கள்)

இரண்டாம்; பாகத்தில் இறுதிக்காண்டமான, இசிறத்துக்(ஹிஜிறத்துக் காண்டம்)காண்டம் அமைந்துள்ளது. இது மக்கமா நகரிலிருந்து மதீனா நகருக்கு நபிகள் நாயகம் புறப்பட்டுச் சென்றது முதல் அவர்களின் மதீனாநகர் வாழ்க்கையைக் கூறுவதாகும். ஈமான் கொண்ட படலம், மதீனத்தார் வாய்மை கொடுத்த படலம், யாத்திரைப் படலம்;, விடமீட்ட படலம,; சுறாக்கத்துத் தொடர்ந்த படலம், உம்மி மகுபதுப் படலம், மதீனம்புக்க படலம், கபுகாபுப் படலம்விருந்திட்டீமான் கொள்வித்த படலம், உகுபான் படலம், சல்மான் பாரிசுப் படலம், ககுபத்துல்லாவை நோக்கித் தொழுத படலம், ஓநாய் பேசிய படலம், வத்தான் படைப் படலம்,

பாத்திமா திருமணப் படலம், சீபுல் பகுறுப் படலம், புவாத்துப் படலம், அசீறாப் படலம்,பத்னுன்ன குலாப் படலம், பத்றுப் படலம், சவீக்குப் படலம், குதிரிப் படலம், தீயம்றுப் படலம், அபிறாபிகு வதைப் படலம், அசனார் பிறந்த படலம், அபூத்தல்ஹா விருந்துப் படலம், உகுதுப் படலம், அமுறாப் படலம், ககுபு வதைப் படலம்,சுகுறாப் படலம், பதுறு சுகுறாப் படலம், உசைனார் பிறந்த படலம், தாத்துற் றஹ்ஹாக்குப் படலம், சாபிர் கடன் றீர்த்த படலம், முறைசீக்குப் படலம், கந்தக்குப் படலம், உயை வந்த படலம், பனீ குறைலா வதைப் படலம், லுமாமீமான் கொண்ட படலம், செயினபு நாச்சியார் கலியாணப் படலம், ஒட்டகை பேசிய படலம், மழையழைப்பித்த படலம், அந்தகன் படலம், கவுலத்தை விட்டுக் கூட்டின படலம், உமுறாவுக்கு போன படலம், சல்மா பொருத படலம், உறனிக் கூட்டத்தார் படலம் ஆகிய படலங்கள் இதில் உள்ளன.

 உமறுப்புலவர்                               உமறுப்புலவர் ( 1642 – 1703 ) தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரத்தைச் சேர்ந்தவர். இவரின் தந்தை சேகு முதலியார் என அழைக்கப்பெற்ற செய்கு முகம்மது அலியார் ஆவார். எட்டயபுர மன்னன் வெங்கடேஸ்வர எட்டப்ப பூபதியின் அவைப் புலவராக விளங்கிய கடிகைமுத்துப் புலவரிடம் உமறு தமிழ்ப்; பயின்று புலமை பெற்றார். தம் ஆசானுக்குப் பின் எட்டயபுர மன்னனின் அவைப்புலவராகப் பொறுப்பேற்றார். செய்கு அப்துல் காதிர்மரைக்காயர் என்ற வள்ளல் சீதக்காதியின் வேண்டுகோளின் வண்ணமே உமறுப்புலவர் சீறாப்புராணத்தை எழுதினார். நூல் முடிவுறும் முன்னரே சீதக்காதிமறைந்தார். பின் அபுல்காசிம் என்ற வள்ளலின்உதவியால் சீறாப்புராணம் நிறைவு பெற்றது. உமறுப்புலவர் முதுமொழிமாலை என்ற என்பது பாக்களால் ஆன நூலையும் படைத்துள்ளார்.                                                        உமறுப்புலவர் வரலாறு

அண்ணல் பெருமானார் முஹம்மது(ஸல்) அவர்களின் காலத்தில் அப்துல்லாஹ் இப்னு பாகிர் என்பார் வாழ்ந்திருந்தார். பெருமானாரின் திருத்தோழராகும் பேறு பெற்ற அன்னார் , அண்ணலாரின் அரிய வாழ்த்தினைப் பெற்றவர். அவரின் வழித்தோன்றல்கள் அனைவரும் காலமெல்லாம் கமழ்மணத்துடன் வாழவேண்டும் என்றே அண்ணலார் ஆசி கூறினார். அந்த பரம்பரையில் வந்தவரே 'சேகு முதலியார்' என்ற செய்கு முஹம்மது அலியார் ஆவர். அன்னார் மலையாள நாட்டிலிருந்து தமிழ்நாட்டிற்;கு வந்து, திருநெல்வேலியைச் சார்ந்த நாகலாபுரத்தில் குடியிருந்துகொண்டு, அதையடுத்திருந்த எட்டையபுரத்து மகாராஜாவிடம்; வாசனைத் திரவியங்களை எடுத்துப் போய் விற்றுக் காலம் கழித்து வந்தார். உயர்ந்த மணப்பொருட்களை வழங்கித் தம் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட சேகு முதலியார் தம் அருகிலேயே வாழ்ந்து வரவேண்டுமென்று மன்னர் விரும்பினார்.எனவே, சேகு முதலியாரும் மன்னரின் விருப்பிற்குக் கட்டுப்பட்டு,நாகலாபுரத்திலும் எட்டையபுரத்திலுமாக வாழ்ந்து வந்தார்.அக்காலத்தில்தான், அவருடைய ஒப்பற்ற அருந்தவக் கொழுந்தாக 'உமறு' என்ற அழகிய குழந்தை பிறந்தது. இளமையிலே எழிலும் கல்வியார்வமும் வாய்க்கப் பெற்ற சிறுவர் உமறு, எட்டையபுரத்து அரண்மனைத் தமிழ்ப்புலவராயிருந்த 'கடிகை முத்து புலவர்'என்பவரிடம் தமிழ்க் கல்வி பயிலத் தொடங்கினார். பல்வகைக் கல்வி-கேள்விகளில் தேர்ந்த உமறு, தம் ஆசானின் பெருமதிப்பிற்குரிய மாணவரானார். இவ்வாறிருக்கையில், ஒருநாள் வடநாட்டிலிருந்து ஆரியமும் அருந்தமிழும் கற்றுப் புலமை பெற்ற 'வாலை வாருதி' என்ற புலவர் எட்டையபுர அரசவைக்கு வந்து சேர்ந்தார். தம்மை வாதில் வெல்லத் தக்கார் யாருமிலார் என்று அவர் மார் தட்டிப் பேசிப் பிற புலவர்களை வாதுக்கழைத்தார். அதன்படியே எட்டையபுரத்து அரசவையிலும் வந்து அறிவித்தார். மன்னரும் ஆவன செய்ய இசைந்தார். புலமைத் திறத்தாலன்றி, மாய மந்திரங்களாலேயே பல அரசவைப் புலவர்களை வெற்றிகொண்ட வாலைவாருதியைப் பற்றிக் கடிகைமுத்துப் புலவர் கேள்வியுற்றிருந்தார். அதனால், வித்தைகள் புரியும் வித்துவானைத் தம்மால் எவ்வாறு வெற்றிகொள்ள முடியுமென்ற நீங்காக் கவலையில் ஆழ்ந்திருந்தார். ஆசானின் கவலையை அறிந்த மாணவர் உமறு, அவரை அணுகி, கவலைக்கான காரணத்தை விளங்கிக் கொண்டார். எனவே, வாலை வாருதியுடன் வாதிடுவதற்கான குறிப்பிட்ட நாள் வந்ததும், தம் ஆசிரியரிடம் அவருக்குப் பகரமாக அரசவை செல்லுவதற்கான அனுமதியை வலிந்துப் பெற்று, எட்டையபுரத்து அரசவைக்கு வந்து சேர்ந்தார். உடல் நலக் குறைவால் கடிகைமுத்துப் புலவர் வரவில்லையென்றும், அவருக்குப் பகரமாக அவரின் மாணவர் வந்திருக்கிறார் என்றும், வாலை வாருதி தம் சொற்பொழிவைத் தொடங்கலாம் என்றும் மன்னர் உத்தரவிட்டார்.

அதைச் செவியேற்ற வாலைவாருதி, தம் வலக்கையிற் போட்டிருந்த தங்கக் கடகத்தை அசைத்து மேலேற்றினார். வழக்கமாக அக்கடகத்திலிருந்து ஒலிக்கும் 'வாலைவாருதி என்றறியீரோ' என்ற சொற்கள், அன்றைக்கு மட்டும், 'வாலைவாருதி என்றறியாயோ பிள்ளாய்!'

என்று உண்டாயின. அப்போது உமறுப் புலவர், தம் இடுப்பில் செருகியிருந்த யாழ்ப்பாணத்து எழுத்தாணியை எடுத்து நிலத்தில் ஊன்றி, "என் எழுத்தாணியே! இவருக்கெதிர் பேசு!" என்று கட்டளையிட்டார். ஒன்றும் நிகழவில்லை! பின்னும் உத்தரவிட்டார். அப்போதும் ஏதும் நிகழவில்லை! மூன்றாவது முறையிலும் முயன்று தோல்வி கண்ட உமறு, கண்கள் சிவக்க, முகத்தில் தீக்கனல் பறக்கக் கடுஞ்சினம் கொண்டு, எழுத்தாணியைப் பார்த்து, 'பேசு!' என்று உரக்கக் கூறி உத்தரவிட்டார். அவை கிடுகிடுத்த அவ்வோசையைத் தொடர்ந்து, அவ்வெழுத்தாணியிலிருந்து கீழ்க்காணும் பாடல் உதிர்ந்து உள்ளங்களை அதிர வைத்தது. "சமரதுர கததுங்க மனருஞ்ச பாசென்று சரிசமா சனமீதிலே அமரவொரு நரகொம்பு தினமுஞ்சு மாசெல்லு மமுதகவி ராஜனானே திமிரபகை வரைவென்ற பருதியெனு மெமதெட்டத் தீரனணி வாயில்வித்வான் உமறுகுமு றிடிலண்ட முகடும்ப டீரென்னு முள்ளச்சம் வையும்பிள்ளாய்!" இதனைச் செவியுற்ற புலவர் வாலைவாருதி, உளம் பதறி, மெய் நடுக்குற்று, தனது மந்திரச் சக்தியெல்லாம் இத்தகைய அற்புதத்தின் முன் அற்பம் என்றுணர்ந்து, எழுந்து சென்று உமறு புலவரிடம் மண்டியிட்டு மன்னிப்புக் கோரி, அரசவையை விட்டு அகன்றார். இந்நிகழ்ச்சி, மன்னருக்கு உமறுப் புலவர் மீது ஒப்பற்ற மதிப்பை ஏற்படுத்திற்று. மகிழ்ச்சிப் பெருக்கால், மன்னர் தம்மிடமிருந்த விருதுகள் பலவற்றையும் உமறுப் புலவருக்கு வழங்கி அனுப்பிவைத்தார். வெற்றி பெற்று வீடு திரும்பிய தம் மாணாக்கரை இறுகத் தழுவிக்கொண்ட கடிகைமுத்துப் புலவர், தாம் அப்போது முதுமை எய்திவிட்டதால், அன்றுமுதல் உமறே எட்டையபுரத்து அரண்மனை அவைப் புலவராக இருக்கவேண்டுமென்று ஆசி கூறி அனுப்பி வைத்தார். அன்று முதல் உமறுப் புலவர் எட்டையபுரத்து அரண்மனையை அலங்கரித்து வந்தார். சீறாப்புராணம் இயற்றப்பெற்ற வரலாறு

தமிழகத்தில் ஆங்காங்கிருந்த முஸ்லிம் மக்கள் இலக்கிய ஆர்வத்துடன் கம்பராமாயணம், மகாபாரதம் போன்ற இலக்கியங்களின் உபந்நியாசங்களைக் கேட்டு வருவது அன்றைய வழக்கமாக இருந்தது.அக்காலத்தில்,இராமநாதபுரச் சேதுபதி மன்னரின் அமைச்சராய் இலங்கி வந்த செய்கப்துல் காதிர் என்ற 'சீதக்காதி மரைக்காயர்'அவர்கள் இதனை உணர்ந்து, முஸ்லிம்கள் அவர்களின் மார்க்க அடிப்படையில் அமைந்த பேரிலக்கியங்களின் உபந்நியாசங்களைக் கேட்கவேண்டும் என்ற பெருவிருப்பை உடையவராயிருந்தனர். தமது இவ்வேட்கையைத் தணிப்பதற்கான நல்வாய்ப்பை எதிர்நோக்கியும் காத்திருந்தார். இவ்வாறிருக்கையில்,ஒருநாள் அரசாங்க வேலையின் நிமித்தம் சீதக்காதி மரைக்காயர் அவர்கள் எட்டயபுர அரசவைக்குச் செல்ல நேர்ந்தது.ஆங்கு உமறு என்ற பெயரில் ஒரு புலவர் இருக்கக் கண்டு,'இவரே பெருமானாரின் வாழ்க்கையைக் காப்பியமாகப் பாட வல்லவர்'என்று ஓர்ந்தார். சின்னாட்கள் கழிந்த பின்னர் தமதில்லத்தில் நிகழ்ந்த விருந்தில் கலந்துகொள்ள உமறுப் புலவர் வந்த போது தமது உள்ளக் கிடக்கையை அன்னாரிடம் வெளியிட்டார் சீதக்காதி வள்ளல். புலவரும் இத்னை அடக்கத்துடன் ஏற்றுக்கொண்டார். எனினும்,வள்ளல் பெருமானாரின் வரலாற்றுச் செய்திகளை உரையாகத் தருவது யார் என்ற கேள்வி எழுந்தது.சீதக்காதி வள்ளல் தம் ஆன்மீக வழிகாட்டியான 'இறைநேசர் ஷெய்கு சதக்கத்துல்லாஹ் அப்பா 'அவர்களை அணுகி, பெருமானாரின் வாழ்க்கைச் சரிதையினைக் காவியமாகப் பாட உமறுப் புலவருக்கு உரை வழங்குமாறு கோரி நின்றார்கள். உமறுப் புலவரின் அலங்கோலத் தோற்றத்தைக் கண்டு,உரை கொடுக்க அப்பா அவர்கள் இசையவில்லை.உளம் வாடிய உமறுப் புலவர்,பெருமானாரின் வாழ்வைக் காவியமாக்கி, அதன் நிமித்தமாக அன்னாரைத் தாம் காணும் நாள் எந்நாளோ என்று ஏங்கி,பள்ளிவாயிலுக்குள் சென்றமர்ந்து தம் உள்ளத்து உணர்ச்சிகளைப் பாக்களாகப் பாடிக்கொண்டிருந்தார். இவ்வாறு எண்பத்தெட்டு பாடல்கள் பாடி முடித்தபோது புலவரைத் துயில் ஆட்கொண்டது. பெருமானார்(ஸல்) அவர்கள், புலவரின் கனவில் தோன்றி, மறுபடியும் அப்பா அவர்களிடம் சென்று உரை கேட்குமாறு பணித்தனர். கண் விழித்த உமறுப் புலவர் கருணை நபியவர்களின் கட்டளையைச் சிரமேற்கொண்டு, அப்பா அவர்களிடம் சென்று உரை கோரினர். முன்போலன்றி, புலவரை எதிகொண்டழைத்து உபசரித்த அப்பா அவர்கள்,சீறா உரை கொடுக்கச் சம்மதித்தனர்.அப்பா அவர்கள் தாங்களாகவும்,தம் மாணாக்கராகிய மஹ்மூது பந்தர் என்று வழங்க பெற்ற 'பறங்கிப் பேட்டையைச் சார்ந்த 'மாமூ நைனார் லெப்பை' என்பார் மூலமும் உமறுப் புலவருக்கு உரை வழங்கினர்.அச்செய்திகளைக் கொண்டு சீறாக் காப்பியம் படைக்கத் தொடங்கினார் நம் புலவர்.

இதற்கிடையில்,சீறாவைப் பாடப் பேருதவியாக இருந்த சீதக்காதி மரைக்காயர் அவர்கள் இறையடி சேர்ந்தனர். காப்பியம் படைத்து வந்த

உமறுப் புலவரின் உள்ளத்தில் பேரிடி விழுந்தது.அந்நிலையில், புலவரின் இரங்க தக்க நிலையை உணர்ந்த 'அபுல்காசிம் மரைக்காயர்'என்ற வள்ளல் பெருமான்,புலவரை அன்புடன் ஆதரித்து, சீறாவை இயற்றத் தாம் உறுதுணையாயிருப்பதாக வாக்களித்துப் பல உதவிகளும் செய்து ஊக்கினார். 'சீறாப்புராணம்"என்ற ஒரு பெருங்காவியம் உருவெடுத்தது. ஈடிணையில்லா இப்பேருதவி- களுக்கு நன்றி சொலும் முகத்தான், உமறுப் புலவர், அபுல் காசிம் மரைக்காயரைத் தம் சீறாப்புராணத்தில் பல இடங்களில் மறவாமல் நினைவு கூர்ந்து போற்றி புகழ்ந்துள்ளார். உமறுப் புலவரின் 'சீறாப்புராணம்'அண்ணல் பெருமானாரின் வாழ்க்கை முழுவதையும் கூறவில்லை என்பது,வியப்பிற்குரியதும்,வருந்தத் தக்கதுமாகும்!யாது காரணத்தாலோ சீறாவில் நபியவர்களின் வரலாறு முழுமையாகக் கூறப்பெறவில்லை.இருப்பினும், இஸ்லாமியத் தமிழிலக்கியங்களில் சீறாப் புராணத்திற்க்கு தனியோர் இடமுண்டு. பெருமானாரின் தூய திருவாழ்க்கையின் எஞ்சிய பகுதிகளை பனூ அகமது மரைக்காயர் யாத்து முடித்தார்கள். இதுவும் 'சின்ன சீறா' என்ற பெயரில் பிரபலமாகியுள்ளது. சீறாப் புராணம்

புலிவசனித்த படலம் ;

பதினான்கே பாடல்களைக் கொண்ட தூதர் முகம்மதிடம் புலி பேசிய

அற்புதத்தைப் பாடும் சிறிய படலம் இது. எல்லாப் பாடல்களும ; அடிதோறும் ஐந்து

சீர்களைக் கொண்ட கலித்துறை யாப்பில் அமைந்தவை.

புதியவன் உரைத்த வாசகம் கேட்டுப் புலி இருக்கும் இடம் அறிந்து அவ்விடம்

நோக்கி இறைத்தூதர் நடந்த செய்தி உரைக்கப்படுகிறது.

சிங்கம் நிகர் முகம்மது வருவதை வேங்கை கண்டதும் மெல்ல நடந்து வந்து

அவர் மலர்ப் பாதங்களைத் தெண்டனிட்டதும் அவர்களைப் போற்றிப ; புகழ்ந்து தான்

பெற்ற புண்ணியப் பலனை எடுத்துரைத்ததும் தொடர்ந்து பேசப்படுகிறது.

பின்னர் முகம்மது மகிழ்ந்து புலியின் தலையையும் முகத்தையும ; பரிவோடு

தடவிக் கொடுத்து வேறு இடம் செல்ல ஆணையிட்டதும் உரைக்கப்படுகிறது.

கண்ட போதினில் வால்குழைத் தரியமெய் கலங்கிக்

கொண்டு மென்மெல நடந்துதன் பெருஞ்சிரங் குனிந்துத்

தண்ட ளிர்ப்பதத் தெரிசனைக் கெனச்சலா முரைத்துத ;

தெண்ட னிட்டது வள்ளுகிர் திண்டிறற் புலியே

மன்னர் முகம்மது வருவதைக் கண்ட பொழுதினில் தன் வாலை வளைத்து அசைத்தத்

தன்னுடைய உடம்பில் நடுக்கமுற்று மெல்ல மெல்ல நடந்து அருகில ; வந்து;

தன்னுடைய பெரிய தலையைத் தாழ்த்தி; குளிர்ச்சி பொருந்திய தளிர் போலும்தங்கள் பாதத்தைத் தரிசிக்க வேண்டும் என்று சொல்லிச் சலாம் உரைத்துப் பணிந்து

நின்றது; கூரிய நகத்தினையும் திண்ணிய வலிமையினையும் உடைய அப்புலி.

எதிரில் கண்டவரை அடித்து வீழ்த்தி உண்டு பசி தீரும் புலி, தூதர்

முகம்மதைக் கண்டதும் அன்பு கொண்டு அச்சத்தோடு மரியாதை தோற மெல்ல

விரும்பி வாழ்த்து உரைத்து நின்றதாக உரைக்கப்படுகிறது. இங்கு அஃறிணை

உயிரிடத்தும் முகம்மது அன்பு காட்டும் பண்பு எடுத்துரைக்கப்படுகிறது.

நலன்பெ றுங்குறை சிகளினில் வந்த நாயகமே

நிலம்ப ரந்துதீன் பெருகிட வெழுந்தநீ ணிலவே

புலன்க ணின்புறக் கண்டனன் களித்தனன் பொருவில்

பலன்பெ றும்படி யாயின னெனப்பகர்ந் ததுவே

குறைஷ் என்பது அரபு நாட்டில் மக்கமா நகரில் வாழ்ந்த மக்கள் குலத்தின் பெயர்

அரபுச் சொல். அவர்களில் ஒருவராகத் தோன்றி உலக மக்கள் இனத்தின் தலைவராக

உயர்ந்த நபிகள் நாயகத்தைப் புலி புகழ்ந்தவாறு முதலடி கூறுகின்றது.

தீன் என்பது அரபுச் சொல். இறைமார்க்கம் என்பது பொருள். தீனுல் இஸ்லாம்என்பது இறைமார்க்கம் உலகெலாம் பரவிப் பெருகக் காரணமாக இருந்தவர் என்பது

கருத்து, வானத்து எழுந்த முழு நிலா உலகனைத்திற்கும் ஒளி தருவது போல உலகமக்கள் அனைவர்க்கும் வழி காட்டல் வழங்குபவர் என்பது கருத்து.முந்திய பாட்டில் புலி பணிந்து வணங்கியதைப் பாடிய புலவர் இப்பாடலில்புலி புகழ்ந்ததையும் புண்ணியம் பெற்றதை உரைத்ததையும் பாடுகின்றார். இவ்விரண்டு

பாடல்களிலும் முகம்மதிடம் புலி பேசிய செய்தி உரைக்கப்படுகிறது.

வந்து தெண்டனிட் டெழுந்துவாய் புதைத்துற வணங்கிப்

புந்தி கூர்தரப் போற்றிய வள்ளுகிர்ப் புலியை

மந்த ராசல முகம்மது நனிமன மகிழ்ந்து

சந்த மென்மணிக் கரத்தினாற் சிரமுகந் தடவி

 

தங்களது முன் வந்து பணிந்து எழுந்து வாய் புதைத்து மிகவும் வணங அதன்

புலமைத் தெளிவாக வெளிப்படும்படி போற்றிப் புகழ்ந்த கூரிய நகத்தை உடைய

வேங்கையை; மலைபோல் உயர்ந்த பெருமைக்குரிய முகம்மது அவர்கள் மனம் மிக

மகிழ்ந்து; தங்களது அழகிய மெல்லிய கரங்களினால் புலியின் தலையையும்

முகத்தையும் தடவிக் கொடுத்தார்.

இன்று தொட்டிவ ணெறியினி லுயிர்செகுத் திடுவ

தன்று வேறொரு காட்டினிற் புகுகவென் றறைந்த

மன்ற றுன்றிய முகம்மதின் மலரடி வணங்கி

நன்று நன்றெனப் போற்றியே நடந்தது வேங்கை

இந்த நாள் முதல் இப் பாதையின்கண் உயிர்களை வதை செய்வது உனக்கு நன்மை

தராது. மற்றொரு காட்டிடத்தில் போய்ச் சேருக என்று கூறினார். நறுமணம் நிறைந்த

முகம்மது அவர்களின் மலர் போன்ற பாதங்களை வணங்கி நல்லது நல்லது எனக்

கூறி அவர்களைப் போற்றிப் புகழ்ந்து கொண்டே அங்கிருந்து புலி நடந்து சென்றது.

படுகொ லைப்புலி மெய்யுறப் பணிந்திவர் பாதத்

தடிவ ணங்கிய காரண வதிசய மதனா

லுடைய வன்றிருத் தூதரே யுண்மையென் றுன்னித்

திடமு டைத்தநெஞ் சாயின ரறிவினிற் றெளிந்தோர்

மிகுந்த கொலைத் தொழிலையுடைய புலியானது உடல் தரையில் பொருந்தும்படி

பணிந்து இவர்களுடைய பாதங்களை அடிவணங்கிய புதுமையான அற்புதம்காரணமாக முகம்மது அனைத்துக்கும் உடைமையாளனாகிய இறைவன் உடைய

இறுதித் திருத்தூதர் ஆவார். எல்லா உயிர்களிடத்தும் அன்பு காடட் வேண்டும் என்றஉயர் பண்பினை அறியமுடிகிறது.

 

 

 

 

 

 

 

 

Comments

Popular posts from this blog

Operating System Structure

Asymptotic Notations

ASP.NET Events Handling